கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிகள், திண்டிவனம், பெரியகுளம், ராணிப்பேட்டை நகராட்சி துணை தலைவர் பதவிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: 10ம் வகுப்பு – தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல
பெண்ணாடம், காடையாம்பட்டி, பொ.மல்லாபுரம் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகள் மற்றும் கடத்தூர், திருப்போரூர், புவனகிரி, கொளத்தூர், வேப்பத்தூர், அனுமந்தன்பட்டி, ஓவேலி ஆகிய பேரூராட்சி துணை தலைவர்கள் பதவி விடுதலைகள் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








