தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்காக 352 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2021-2022 நிதியாண்டில் 28 மாநிலங்களுக்கு இதுவரை மொத்தம் 17,747 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு 352 கோடியே 85 லட்சம் ரூபாயும், புதுச்சேரிக்கு 17 கோடியே 58 லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவிற்கு 355 கோடியே 39 லட்சம் ரூபாயும், கர்நாடகாவிற்கு 492 கோடியே 39 லட்சம் ரூபாயும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கு 4,645 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.







