மதுரையில் நடைபெற உள்ள அதிமுக பொன்விழா மாநாடு வெற்றி பெற வேண்டி கடலூர் மாவட்ட அதிமுக சார்பில் கடலுக்கு அடியில் பேனர் வைத்து வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மதுரையில் வருகிற 20ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.இதற்கான முன்னேற்பாடுகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மாநாட்டில் பங்கு பெறுவதற்காக தொடர் ஆலோசனை கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட தகவல் தொழிநுட்ப பிரிவின் சார்பாக மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் பிரித்வி ஏற்பாட்டில் கடலூர் பகுதியிலுள்ள கடலுக்கு அடியில் மதுரையில் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாடு வெற்றி பெற வேண்ட கடலூரில்
கடலுக்கு அடியில் பிரம்மாண்டமான அதிமுக பேனரை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேந்தன்







