CSK vs SRH போட்டி : சேப்பாக்கத்தில் இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கிச் சென்ற ரசிகர்கள்

சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏப்ரல் 21 ஆம்…

சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏப்ரல் 21 ஆம் தேதி மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 1,500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரையிலான டிக்கெட்கள் நேரடியாகவும், 5 ஆயிரம் ரூபாய் வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் விற்பனையானது.

நேரடி டிக்கெட்களை வாங்குவதற்காக நேற்று இரவு முதலே ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு குவிந்தனர். அவர்களை போலீசார், காலை 6 மணிக்கு மேல் வருமாறு திருப்பி அனுப்பினர். இருப்பினும் நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : நேற்று 9,000… இன்று 7,000… – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!

டிக்கெட் வாங்க வந்த பெண்கள் சிலர் தனியாக பெண்களுக்கு வரிசை ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கேட்டனர். முதல் போட்டியின்
போது பெண்களுக்கு தனிவரிசை அமைத்தது போல், ஏன் இன்று ஏற்படுத்தவில்லை என்று
கேள்வி எழுப்பி வரிசையில் காத்திருந்தனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட்களை வாங்கிச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.