ஆடுகளத்தின் தன்மை கணித்தை போல் இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் 61-வது ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 34 பந்துகளில் 48 ரன்களும், டேவன் கான்வே 28 பந்துகளில் 30 ரன்களும் எடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 18.3 ஓவர்களில் 4 விக்கெடுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், நிதானமாக விளையாடிய நிதிஷ் ராணா, ரின்கு சிங் ஆகியோர் கொல்காத்தா அணியை வெற்றிப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றனர். இது கொல்கத்தா அணிக்கு 6வது வெற்றியாகும்.
இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது:







