அரியலூரில் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்.இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.இவர் எப்போதும் மாடுகளை மேய்ச்சலுக்காக கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் எப்போதும் போல நேற்று கொள்ளிடம் ஆற்றிற்கு மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது மாடுகள் ஆற்றின் நடுவே உள்ள திட்டில் நின்றதால் அவற்றை ஓட்டி வர முயன்ற போது எதிர்பாரத விதமாக முருகானந்தம் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.முருகானந்தத்தை மீட்பதற்காக அவரது உறவினர் ஆறுமுகம் என்பவர் ஆற்றில் இறங்கிய போது அவரும் ஆற்று சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டார்.
தீயணைப்பு துறையினர் இரண்டு பேரையும் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட வந்த நிலையில், ஒருவரது உடல் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. மற்றொருவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-வேந்தன்







