செல்போன் கடையில் புகுந்து பட்டப்பகலில் உரிமையாளரை தாக்கிய வீடியோ வைரல்!

பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில்  செல்போன் கடை உரிமையாளரை மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து தாக்கிய சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் கண்ணன் என்பவர் செல்போன்…

பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில்  செல்போன் கடை உரிமையாளரை மர்ம நபர்கள் கடையினுள் புகுந்து தாக்கிய சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் கண்ணன் என்பவர் செல்போன் கடையை நடத்தி வருகிறார். மே 14 ம் தேதி இவரது கடைக்கு வந்த சிலர் திடீரென கண்ணனை தாக்கியுள்ளனர்.இது குறித்து போலீசார் கண்ணனிடம் விசாரித்த போது, கண்ணனுக்கும், பட்டுக்கோட்டை கண்டியன்  தெருவை சேர்ந்த தயாநிதி என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உணவகத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் முன்விரோதம் இருந்து  வந்ததாக தெரியவந்தது.
இந்நிலையில் கண்ணன் தனது கடையில் செல்போன்களை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது தயாநிதியும் அவரது நண்பர்களும் வந்துள்ளனர். அப்போது  திடீரென கண்ணனை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
கண்ணன் தாக்கப்பட்ட சிசிடிவி வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மேலும் கண்ணன் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.