CSK vs KKR: விதிமுறை மீறியதாக கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அபராதம்!

சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி-20 போட்டியில் விதிமீறல் காரணமாக கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சென்னை…

சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி-20 போட்டியில் விதிமீறல் காரணமாக கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 61-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோற்கடித்தது. இத்துடன் கொல்கத்தா தனது 6-வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது.

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான இந்த போட்டியில்  20-வது ஓவரை கொல்கத்தா அணி சரியான நேரத்தில் வீசத் தவறியது. மேலும் புதிய விதிகளின்படி, கொல்கத்தா அணியிடம் கள நடுவர்கள், 30-யார்டு வட்டத்திற்கு வெளியே நான்கு பீல்டர்களுக்கு மேல் களமிறக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அந்த விதிமுறையையும் கொல்கத்தா அணி கடைபிடிக்க தவறியதால் அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இது போன்ற விதிமுறைகள் மீறல் காரணமாக தண்டிக்கப்பட்டது. அப்போது, ​​நிதிஷ் ராணாவுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இந்த முறை அதே குற்றத்தை மீண்டும் செய்ததால் அவருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.