பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டுள்ளது. பயிர் பாதிப்பு தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடாக, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பினை வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று மத்திய குழு நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.
சென்னை தர கட்டுப்பட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி.யூனுஸ், பெங்களூரு தரக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் போயோ ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர். மத்திய குழு ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து, அந்த ஆய்வின் அறிக்கைகளை அவர்கள் தாக்கல் செய்வதற்குள்ளாக அறுவடை காலம் முடிந்து நெல்மணிகளை விற்பனை செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் குற்றசாட்டுகளை வைக்கின்றனர்.
இந்த நிலையில் பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளது. பயிர் பாதிப்பு தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை,திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இடத்திற்கே சென்று இந்த கள ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
- பி. ஜேம்ஸ் லிசா






