சாலமன் பாப்பையா மறைவு: ரஜினி, கமல் இரங்கல்!

மறைந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாபபியாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலாஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார்.

நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும்.

அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.