கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் இன்று வெளியானது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் திரைக்கு வந்தன.
அஜீத், எச்.வினோத், போனி கபூர் ஆகியோரின் மூன்றாவது படைப்பாகத் துணிவு வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். மேலும் அவரது நெகட்டிவ் ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. 200 கோடிக்கு மேல் வசூல் செய்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், துணிவு படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் துணிவு படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
If currency notes looked like this, we're here to say that money CAN buy happiness!🤩💥
Thunivu is now streaming in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi on Netflix!🔥 #ThunivuOnNetflix
🎨: @CassettePada pic.twitter.com/j8aHycYu66
— Netflix India South (@Netflix_INSouth) February 8, 2023
அத்துடன், அஜித் நடிக்கும் 62-வது படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அஜீத் குமார் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் நடிப்பதாகக் கூறப்பட்ட AK62 படம் பிப்ரவரியில் தொடங்குவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது திடீரென இந்த கூட்டணியில் உருவாகவுள்ள படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் AK62 உருவாக உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அஜித் 62வது படத்தின் இந்த குழப்ப நிலை அஜித் ரசிகர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.








