#WT20WC | பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 9வது பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்…

Indian cricket team defeated Pakistan by 6 wickets to win the ICC Women's T20 World Cup.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

9வது பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதையும் படியுங்கள் : INDvsBAN | டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது . அந்த அணியில் நிடா தர் 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அருந்தாதி ரெட்டி 3 மற்றும் ஷ்ரேயன்கா பட்டில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 106 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயத்தனர்.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சபாலி வர்மா 32 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் பாத்திமா சனா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ள இந்தியா அணி, அடுத்து வரும் 9ம் தேதி இலங்கைக்கு எதிராக விளையாட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.