#Kanguva படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்.20ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இந்தப் படத்தில் சூர்யா,…

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்.20ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இந்தப் படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, பாபி தியோல் போன்ற நடிகர்கள் நடித்திருக்கின்றனர். வரும் நவம்பர் 14ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு கூடிய விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த செய்தி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.