இந்தியா செய்திகள்

ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நிதியளித்த கவுதம் கம்பீர்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஒரு கோடி ரூபாய் நிதியளித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் அயோத்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் கட்டுவதற்கு 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்காக நன்கொடை திரட்டும் பணிகளில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. பாஜக சார்பில் கூப்பன் வாயிலாக நன்கொடை திரட்டும் பிரச்சாரம் சமீபத்தில் டெல்லியில் துவங்கியது.

இந்த நிலையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு தன் குடும்பத்தின் சார்பாக 1 கோடி ரூபாய் நிதியளிப்பதாக கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினர் கவுதம் கம்பீர் அறிவித்துள்ளார். தனிச் சிறப்பு வாய்ந்த ராமர் கோயில் கட்டுவது அனைத்து இந்தியர்களின் கனவாகும். நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. தற்போது ஒற்றுமையும், அமைதியும்தான் நிலவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆகஸ்ட் 16ல் அமைச்சரவை விரிவாக்கம்…24ல் நம்பிக்கை வாக்கெடுப்பு…

Web Editor

சிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

Jeba Arul Robinson

டெல்லியில் திறக்கப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

Arivazhagan Chinnasamy

Leave a Reply