திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தை அடுத்த படப்பையில் நீர்வாழ் உயிரினங்களுக்காக, நோயறியும் ஆய்வகத்திற்கு மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பாரமரிப்புத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கலர் மீன்கள் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற தேர்தலில் அதிமுக அருதி பெருபான்மை இடங்களில் வெற்றிபெறும் எனவும் திமுக கூட்டணியில் இருந்தும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். மேலும் மக்களவையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி தொடரும் எனவும் பாமகவுடன் எந்த இழுபறியும் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்







