அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வாங்கப்பட்டதாக 2ஆம் இடத்தை பிடித்த மாடுபிடி வீரர் புகார் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 16ஆம் தேதி கோலகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக…

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வாங்கப்பட்டதாக 2ஆம் இடத்தை பிடித்த மாடுபிடி வீரர் புகார் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 16ஆம் தேதி கோலகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ஏராளமான பரிசு வழங்கப்பட்டன. இந்நிலையில் ஜல்லிக்கட்டின் போது மாடுபிடி வீரருக்கு முதல் பரிசான காரை கொடுப்பதில் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஒரே பதிவெண்ணில் 2 பேர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று முதல் பரிசை வாங்கி உள்ளதாக, 2ஆம் இடத்தை பிடித்த கருப்பண்ணன் என்ற மாடுபிடி வீரர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

இதனிடையே ஆள்மாறட்டம் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தவும், அறிக்கை தாக்கல் செய்யவும் மதுரை கோட்டாச்சியருக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply