#Kodanad கொலை கொள்ளை வழக்கு | தனியார் வங்கி அதிகாரி உள்ளிட்ட 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு…

CPCID to 2 people in Koda Nadu murder and robbery case. Investigation..!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கோடநாடு பங்களாவில் புகுந்த கும்பல், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள் :“காந்தி முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள்” | #Parliament -ல் சிலை இடமாற்றம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் அடிப்படையில் ஒவ்வொருவருக்காக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் கோடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக கோயில் பூசாரியாக இருந்து வரும் விக்னேஷ் என்ற நபருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிருந்தனர். இதேபோல தனியார் வங்கி தரப்பு நிர்வாகிகளுக்கும் இந்த விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதன்படி இன்று கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கோயில் பூசாரி விக்னேஷ் மற்றும் தனியார் வங்கி அதிகாரி நேரில் விசாரணைக்கு ஆஜராகினர். இருவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணயை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.