கார் மீது மாட்டு சாணம்..! கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மருத்துவர் செய்த வினோத செயல்..!

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க தனது கார் முழுவதும் மாட்டு சாணத்தை பூசிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முழுமையான கோடைகாலம் துவங்குவதற்கு…

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க தனது கார் முழுவதும் மாட்டு சாணத்தை பூசிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முழுமையான கோடைகாலம் துவங்குவதற்கு முன்பாகவே தற்போது இந்தியா முழுவதுமே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், அடுத்த நான்கு நாட்களுக்கு இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வெப்ப அலை நிலவும் என வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ள தாகவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் இந்த வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் ஏசி வாங்கி மாட்டுவது, குளிச்சியான பானங்கள் வாங்கி குடிப்பது, உச்சி வெயில் நேரத்தில் வெளியில் செல்லாமல்
பயணத்தை தவிர்ப்பது என பல விஷயங்களை தொடர்ந்து செய்து இந்த கொடுமையான வெயிலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். அந்த வரிசையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பயணத்தின்போது வெயிலில் இருந்து தப்பிக்க புதிய யுக்தியை கையில் எடுத்திருக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவரான சுஷில் சாகர் ஒரு ஹோமியோபதி மருத்துவர் ஆவார். இவர் பயணத்தின் போது வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு தனது கார் முழுவதும் மாட்டுச்சானத்தை பூசி பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வாறு செய்வதால், காரினுள் வெயிலின் வெப்பம் இறங்குவது தடுக்கப்படும் என்பது சுஷில் சாகரின் நம்பிக்கை. இதற்காக சில மாதங்களாக
மாட்டு சாணியை பூசி சில ஆய்வுகள் அவர் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சுஷில் சாகர் பேசுகையில் “சூரிய வெப்பத்தின் தாக்கம் மாட்டுச்சாணத்தின் மூலமாக தவிர்க்கப்படும்.

இதனால் காருக்குள் ஏசியை போட்டவுடன் சில நிமிடங்களிலேயே, கார் குளுமையாக
உடனே மாறிவிடுகிறது. இதனால் மழை மற்றும் நீர் ஆகியவற்றிலிருந்து காரினை முறையாக பராமரித்து பாதுகாத்தால் இந்த யுக்தி, இந்த கோடைக்காலம் முழுவதும் கை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை. கடுமையாக அதிகரிக்கும் வெயிலுக்கு இது ஒரு நல்ல முயற்சியாக நான் கருதுகிறேன் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.