இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,60,31,991 ஆக அதிகரித்துளள்து.
நேற்று மட்டும் கொரோனாவால் 4,209 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,91,331 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்றைய நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3,57,295 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,27,12,735 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 30,27,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 19,18,79,503 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







