முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மத்திய பட்ஜெட்: தென்னிந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டங்கள் இடம்பெறுமா?

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அகில இந்திய வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னிந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு

தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு இன்னும் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பண்ணிடும் காலமாக நீடித்துக் கொண்டிருக்கிறது ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் தென்னிந்தியாவிற்கான அறிவிப்புகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்பட்டது இல்லை ஆனால் தற்போது அறிவிக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் ஆவது அறிவிக்கப்பட்ட
திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக தென்னிந்தியாவில் மிக முக்கியமான வர்த்தக நகரமாக விளங்கும் தூத்துக்குடி நகரின் வ உ சி துறைமுகம் மிகப்பெரிய அருகில் சரக்குகளை கையாளுவதில் சாதனை படைத்தாலும் அந்த துறைமுகத்திற்கான வழி துறைமுகம் அமைப்பதற்கான அறிவிப்புகள் பல்வேறு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டும் நிதி முழுமையாக ஒதுக்கப்படாததால் இன்னமும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அந்த அகலவில் வெளித் துறைமுகம் அமைப்பதற்கு முதல் கட்டமாக நிதியை ஒதுக்கீடு செய்து இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டால் தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் அத்துடன் தொழில் வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அது அமையும் என்று எதிர்பார்க்கின்றனர் அகில இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பினர்.

அதேபோன்று தொழில் வளர்ச்சியில் மிகவும் முக்கியமாக குறு தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் வழங்கும் முறையில் இன்னும் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்திருப்பதுடன் அவற்றிற்கான உரிமைகளை வழங்குவதில் ஒற்றை சாளர முறை பின்பற்ற வேண்டும் அதேபோன்று தூத்துக்குடி விமான நிலையத்தை தென்னிந்தியாவிற்கான சர்வதேச சரக்கு விமானம் உடையமாக அறிவித்து அதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மேலும் தொழில் மேம்பாட்டிற்கு ஏற்றார் போல் தூத்துக்குடி முதல் மதுரை வரைவிலான நான்கு வழிச்சாலை எட்டு வழிச்சாலையாக மாற்றப்பட வேண்டும் என்றும் சென்னை கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையை எட்டு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்றும் அகில இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

எதிர்பார்ப்புகள் எதிர்பார்ப்புகளாகவே கடந்து விடாமல் யதார்த்தமாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டால் தென்னிந்தியாவின் தொழில் வளம் மேம்படுவதுடன் வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இசக்கி ராஜா-தூத்துக்குடி ,
ஆல்வின்-திருநெல்வேலி,
செய்தியாளர்கள்,
நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!

Halley Karthik

கொரோனாவால் உயிரிழப்பு இனிமேல் வராது என சொல்லமுடியாது – அமைச்சர் எச்சரிக்கை

Web Editor

ஆகாஷ் அம்பானியின் பாக்கெட் மணி எவ்வளவு தெரியுமா?…

Web Editor