இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,67,059 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17 லட்சத்து 43 ஆயிரத்தி 059 பேர் சிகிச்சை பெற்று வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், 1 லட்சத்து 67 ஆயிரத்து 059 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நேற்றைய
கொரோனா எண்ணிக்கையை விட குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 1192 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 242 ஆக
அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய
சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 166.68 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.








