முக்கியச் செய்திகள் இந்தியா

விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில், ஸ்னேக் மாஸ்டர் ரான வாவா சுரேஷ்?

கேரளாவில் ஆயிரக்கணக்கான விஷ பாம்புகளை பிடித்து மக்களை காப்பாற்றி ஸ்னேக் மாஸ்டர் என அழைக்கப்படும் ரான வாவா சுரேஷ், விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாவா சுரேஷ், பாம்பு பிடிப்பதில் வல்லவர். 200-க்கும் மேற்பட்ட ராஜ நாகங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பாம்புகளை பிடித்து கேரளாவின் snake master என்றும் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் கோட்டயம் அருகே வீட்டுக்குள் நுழைந்த விஷ பாம்பை வாவா சுரேஷ் பிடிக்க முயன்றார். அப்போது, பாம்பு திடீரென அவரின் தொடையில் கடித்து விட்டு தப்பியது. எனினும் விரட்டி சென்று பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாம்பின் விஷத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு வாவா சுரேஷ் ரத்த வாந்தியெடுத்தார். உயிருக்கு போராடிய அவர், கோட்டயம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷ பாம்புகள் குறித்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக வாவா சுரேஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்னேக் மாஸ்டர் என அழைக்கப்படும் ரான வாவா சுரேஷ் விரைந்து நலம்பெற வேண்டும் என மக்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வட துருவத்தின் வான்வழியாக ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண் விமானிகள்; இந்திய விமான வராலாற்றில் புதிய சாதனை!

Saravana

கல்குவாரி விபத்து; மீட்பு பணியில் பின்னடைவு!

Arivazhagan Chinnasamy

தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது: எல்.முருகன்!