தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று வருமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1.56 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல ஒரே நாளில் 2,023 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே கொரோனாவைத் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனாவை தடுப்பூசி தடுக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. இதுதொடர்பாக மத்திய அரசு ஸ்லைடு வழியாக பதிலளித்துள்ளது.
இதுவரை 1.01 கோடி பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 93,56, 436 பேர் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். அவர்களில் 4,208 பேருக்கு, அதாவது 0.04 சதவிகிதத்தினருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 17,37,178 பேரில் 695 பேருக்கு மட்டும்தான் பாதிப்பு பதிவானது. இது 0.04 சதவிகிதம் ஆகும்.
கோவிஷீல்டு தடுப்பூசியை இதுவரை 11.6 கோடி பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 10,03,02,745 பேரில் 17,145 சதவிகிதம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.02 சதவிகிதம் ஆகும். இரண்டாவது தவணை கோவாக்ஸின் தடுப்பூசியை 1,57,32,754 பேர் எடுத்துக்கொண்டனர். இவர்களில் 5014 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.03 சதவிகிதம் ஆகும்.