முக்கியச் செய்திகள் தமிழகம்

இதுவரை இல்லாத அளவு; 11,000த்தை கடந்து பதிவான கொரோனா பாதிப்பு!

இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவாக 11 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது கொரோனா பாதிப்பு. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும், ஞாயிற்றுக் கிழமையும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  இன்றைய கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 11,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,25,059 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 53 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 13,258 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட  84,361 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இன்று மட்டும் 7,071 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக 9,27,440 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாவட்ட அளவில் சென்னையில் 3750 பேருக்கு அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதற்கடுத்து செங்கல்பட்டில் 947, கோவையில் 715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. 

Advertisement:

Related posts

கங்காரு பொம்மை வடிவ கேக்கை வெட்ட மறுத்த ரஹானே; ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Jayapriya

லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளை மூன்று வாரத்திற்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Saravana Kumar

இந்திய ஏவுகணைகளின் புதிய அப்டேட்; மிரளும் அண்டை நாடுகள்!

Niruban Chakkaaravarthi