குற்றம் செய்திகள்

வில்லியனூர் அருகே பயங்கரம்…

வீச்சுவில்லியனூர் அருகே கல்லூரி மாணவியை கொன்று பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி சுடுகாட்டில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீச்சுவில்லியனூர் அருகே உள்ள சந்தை புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜஸ்ரீ 17. இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையொட்டி பொறையூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாக்கு மூட்டை ஒன்று மர்மமான முறையில் கிடந்தது தகவல் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன், காவல் ஆய்வாளர் கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் பிரபு உட்பட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்ததில் பெண்ணின் பிணம் கிடப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த காயங்களுடன் உடல் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் காணாமல் போன மாணவி ராஜஸ்ரீ தான் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் சுடுகாட்டில் கட்டி பிணமாக வீசப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மாணவி ராஜஸ்ரீ கொலை செய்யப்பட்டது குறித்து விசாரித்ததில், அவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவியை அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும் சம்பவ இடத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரமடைந்த காதலன் மாணவியை வெட்டி கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. மேலும் மாணவியின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுத சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் மாணவி கொலை குறித்து விசாரித்து வருகிறார்கள். மாயமானதாக கருதப்பட்ட கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் சுடுகாட்டில் பிணமாக வீசப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

ஊரடங்கு தளர்வுகள்: சலூன், பூங்கா, பள்ளி, கல்லூரி நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி!

Gayathri Venkatesan

இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ்!

Gayathri Venkatesan

இந்தியாவின் இளம் வயது பெண் விமானி ஆயிஷா அசிஸ்!

Jeba