முக்கியச் செய்திகள் இந்தியா

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம்: மத்திய அரசு

கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலை பரவலையடுத்து நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பணியாளர் மற்றும் பயிற்சி துறை வெளியிட்ட விதிமுறைகள் குறித்து இன்று விளக்கிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில், பணி நேரத்தில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கும் வரை விலக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

துணை செயலர்கள் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அரசு ஊழியர்களில் 50 சதவீதம் மட்டும் பணிக்கு வர அறிவுறுத்தப்படுவதுடன், எஞ்சிய 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். சுழற்சி முறையில் இது அமல்படுத்தப்படும்.இருப்பினும், வீடுகளில் இருந்து பணிபுரிவோர், தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை; கந்தசஷ்டி திருவிழா

Halley Karthik

பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Saravana Kumar

சென்னையில் வீட்டிற்கே வந்த கொரோனா தடுப்பூசி!

Gayathri Venkatesan