முக்கியச் செய்திகள் தமிழகம்

உணவின்றி மயங்கிய முதியவர்; தனது உணவை கொடுத்து உதவிய எஸ்ஐ

கடலூர் அருகே ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த முதியவருக்கு பெண் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர், தான் வைத்திருந்த உணவை வழங்கி உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் ஊரடங்கை மீறி அத்தியாவசியமின்றி வெளியே வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீமுஷ்ணம் அருகே உணவு இன்றி தவித்த முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த பெண் உதவி காவல் ஆய்வாளர் சுபிக் ஷா, உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தார். பின்னர் தான் சாப்பிட வைத்திருந்த உணவை முதியவருக்கு கொடுத்து உதவினார். மனித நேயம் மாறாமல் உதவிய பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல ஊரடங்கு காலத்தில் சாலைகளில் வசிப்பவர்கள், உணவின்றி தவிப்பவர்களுக்கு  உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.

Advertisement:
SHARE

Related posts

டெபிட்- கிரெடிட் கார்டுகள் பண பரிவர்த்தனை முறையில் புதிய மாற்றம்!

Gayathri Venkatesan

மது வாங்கினால் ரசீது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்

Ezhilarasan

தமிழ்நாட்டில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Saravana Kumar