கொரோனா தொற்று பரவலின் 3ம் அலை, வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் உச்சம் தொடும் என சென்னை ஐஐடி குழு கணித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவலின் வேகம் கடந்த சில நாட்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலின் 3ம் அலையின் தீவிரம் குறித்து, கணித அடிப்படையிலான ஆய்வை, சென்னை ஐஐடியின் கணிதத்துறை மேற்கொண்டது.
அதில், கொரோனா 2-ம் அலையில் தொற்று பாதித்த ஒருவர் 1 புள்ளி 69 நபர்களுக்கு தொற்றை பரப்பிய நிலையில், தற்போதைய 3-ம் அலையில் ஒருவர் 4 பேருக்கு பரப்புவது தெரியவந்துள்ளது.கொரோனா 3-ம் அலை பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் உச்சம் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய இரு அலைகள் போல் இல்லாமல் 3ம் அலையின் பாதிப்புகள் வெகுவாக குறையும் என்றும், தொற்று அதிகரிக்கும் வேகத்திலேயே மீண்டும் குறையத் தொடங்கும் என்றும் சென்னை ஐ.ஐ.டி. கணிதத்துறை பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.








