சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம், கேரளா ஆகிய இருமாநிலங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆறாக சிறுவாணி உள்ளது.கேரள மாநிலத்தின் முத்திக்குளம் என்ற பகுதியில் உருவாகும் சிறுவாணி கூடுதுறையில் பவானி ஆற்றுடன் இணைகிறது.சிறுவாணி அணையும்,பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை நிறைவு செய்கிறது. இந்நிலையில் கேரள அரசு சட்டவிரோதமாக சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் நடவடிக்கைகளை துவங்கி உள்ளது. நெல்லிப்பதி பகுதியில் இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
சிறுவாணி மற்றும் பவானியானது காவிரி துணை ஆறுகள் என்பதால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை துவங்க கூடாது என்பது சட்டமாகும். தடுப்பணை கட்டப்பட்டால் கோடைகாலங்களில் தமிழகத்தின் குடிநீர் முற்றிலும் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கேரள அரசின் தடுப்பணை கட்டும் திட்டத்தை கண்டித்து கோயமுத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கேரள அரசின் பேருந்தை சிறைப்பிடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மதிமுக, விசிக, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட
பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
—வேந்தன்