முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்: முதல்வர்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்க, தமிழக அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக 25 மாற்றுத் திறனாளிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:

Related posts

கோவையில் 60% வரை கொரோனா தொற்று குறைந்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

Jeba

அதிமுக, பாமக சமூக நீதிக்கான கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

எல்.ரேணுகாதேவி

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் கை கூப்பி வேண்டுகோள்

Karthick