சீனாவில் நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவு 7.3…

தென்மேற்கு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவு 7.3 ஆக பதிவாகியுள்ளது. தாலி பாய் மாகாணத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் உணரப்பட்ட இந்த நில நடுக்கத்தில், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேருக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கடுமையான நிலநடுக்கத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதிப்படைந்துள்ளதாகவும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீதிகளில் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழு சேதங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.