அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மூன்றாவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய பைபாஸ் அறுவை மேற்கொள்ளப்பட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருடைய நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொளி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமைச்சகர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மீண்டும் 14 நாட்கள் நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








