ஆபாச காட்சியில் பகவத்கீதை வசனம்…தணிக்கை குழு மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு…

கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தில் நடிகர் சில்லியன் மர்பி நடித்துள்ள பெயரிடப்பட்ட கதாபாத்திரம் ஆபாச காட்சியில் பகவத் கீதையின் வசனங்களை கூறியது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்…

கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹைமர்’ திரைப்படத்தில் நடிகர் சில்லியன் மர்பி நடித்துள்ள பெயரிடப்பட்ட கதாபாத்திரம் ஆபாச காட்சியில் பகவத் கீதையின் வசனங்களை கூறியது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சினிமா உலகின் மந்திரகாரன் என்று புகழப்படும் நோலன் படத்தின் சிறு அப்டேட்டும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Following படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான நோலன், தொடர்ந்து வெளியான தனது படங்கள் மூலம் தனக்கென தனி பாணியை உருவாக்கினார். இயற்பியல் விதிகளில் தொடங்கி விண்வெளியின் கருந்துளை வரை தனது படங்கள் வாயிலாக இயற்பியல் வகுப்பெடுத்தவர் கிறிஸ்டோபர் நோலன்.

விண்வெளி சார்ந்த தனது படத்திற்கு நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்களை உடன் வைத்து திரைக்கதை அமைத்து நம்மையும் விண்வெளிக்கே அழைத்து சென்றவர். இவர் இயக்கத்தில் வெளியான இன்டெர்ஸ்டெல்லர் விண்வெளி சார்ந்த படங்களில் காலத்தால் அழியாதது.

மேஜிக்கை வைத்து மேஜிக் செய்து (The Prestige ), கனவுக்குள் கனவு என மாய வித்தை நிகழ்த்தியது (INCEPTION ) என திரையில் வித்தைகள் நிகழ்த்தியவர். தற்போது இரண்டாம் உலகப் போரின் போது அணுக்குண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரைப் பற்றி படமெடுத்துள்ளார். இதற்கு முன்பாக வெளியான இவரது படமான டெனெட் படத்தில், காட்சிகளைத் தத்ரூபமாகக் கொண்டுவரும் நோக்கில் அசலான விமானத்தை வெடிக்கச் செய்து அதை காட்சிப்படுத்தி சினிமா உலகையே ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், நோலன் அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம்  ஜூலை 21-ம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அத்துடன் அண்மையில் வெளியான இப்படம் உககம் முழுவது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில்,  படத்தில் ஒரு காட்சியில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் காட்சியில் ‘உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்ற பகவத் கீதையின் வரிகளை படிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ள நிகழ்வு இணையத்தில் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக இந்து மதத்தைப் புண்படுத்திவிட்டதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சம்பந்தப்பட்ட அக்காட்சிகளை உடனே நீக்க வேண்டும் என்று, சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டுள்ளதாகவும், இக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/UdayMahurkar/status/1682824374238466048?s=20

அத்துடன், Save culture save India அறக்கட்டளையின் சார்பாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தற்போது ஒப்பன்ஹைமருக்கு எதிராக வரும் அறிக்கைகள் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இருந்தும் கிறிஸ்டோபர் நோலனின் ஒப்பன்ஹைமர் திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் 174 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.50 வசூல் செய்து இன்றும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.