மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை 7-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில்…

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை 7-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று,  சிசோடியாவின் சி.பி.ஐ. காவல் 2-வது முறையாக 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதையும் படிக்கவும்: செல்லப் பிராணிகளுக்கு டும் டும் டும்…! வைரலாகும் வீடியோ

இதையடுத்து வரும் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மதுபானக்கொள்கை ஊழலில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், மணீஷ் சிசோடியாவை முதலில் சிபிஐ கைது செய்தது. அதில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சோதனையில் பணமும் சிக்கவில்லை. சிசோடியாவின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதனால் அவர் நாளை ஜாமீனில் விடுதலை செய்ய வாய்ப்புள்ளது. எனவே அமலாக்கத்துறையினர் பொய்யான வழக்கில் இன்று மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளனர் என பதிவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.