செல்லப் பிராணிகளுக்கு டும் டும் டும்…! வைரலாகும் வீடியோ

செல்லப்பிராணிகளுக்கு நடைபெற்ற திருமண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருமனங்கள் இணைந்து புதுமண வாழ்க்கையை தொடங்குவதற்காக திருமணம் நடத்தப்படும். இந்த திருமண விழாவிற்கு அந்த குடும்பங்களின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின்…

செல்லப்பிராணிகளுக்கு நடைபெற்ற திருமண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருமனங்கள் இணைந்து புதுமண வாழ்க்கையை தொடங்குவதற்காக திருமணம் நடத்தப்படும். இந்த திருமண விழாவிற்கு அந்த குடும்பங்களின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் முன்னிலையிலும் அக்னி சாட்சியாக நடைபெறுவது வழக்கம். நாம் அனைவரும் இதுபோன்ற ஒரு திருமண நிகழ்வில் தான் பெரும்பாலும் பங்கேற்றிருப்போம். ஆனால் இப்போது வித்தியாசமான ஒரு திருமண பந்தத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். அப்படி என்ன வித்தியாசமான திருமணம் பந்தம் என்று யோசிக்கிறீர்களா? ஆம் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இப்படி எல்லாம் செய்வார்களா என்று தோன்றும் வகையில் அந்த திருமணம் அமைந்துள்ளது.

இதையும் படிக்கவும்: விவசாயி மகனை திருமணம் செய்தால் ரூ.2 லட்சம்: கர்நாடகாவில் நூதன தேர்தல் வாக்குறுதி!

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹேடிண்டர்சிங் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் அழகான இரண்டு செல்லப்பிராணிகளுக்கு திருமண வைபவம் நடக்கிறது. அதில், செல்லப்பிராணிகளுக்கு அழகான உடைகள் அணிந்து, ஆண் நாயை மேள தாளங்கள் முழங்க, பொம்மை காரில் ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். பெண் நாயை பல்லக்கில் தூக்கி செல்கின்றனர். மனிதர்களுக்கு நடைபெறும் திருமண ஊர்வலம் போன்று இந்த செல்லப்பிராணிகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பதிவிட்ட இரண்டு தினங்களில் இதுவரை 11,000 பார்வைகளை பெற்றுள்ளது. இதில் கமெண்டில் ஒருவர், இந்த திருமணத்தில் நான் கலந்து கொள்ளதாதது வருத்தமளிக்கிறது என்றும், மற்றொருவர் இதேபோல் நான் எனது பூனைகளுக்கு திருமணம் நடத்தப்போவதாகவும் பதிவிட்டிருந்தனர். செல்லப்பிராணிகளுக்கு திருமணம் நடைபெறும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.