செய்திகள் சினிமா

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனுவுக்கு, வருமான வரித்துறை பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு

இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்தும்படி ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய
நோட்டீசை எதிர்த்து பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த
மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசை படைப்புகளுக்கு ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி
ஜி.எஸ்.டி ஆணையர், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ்
அனுப்பியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி
செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய
நோட்டீசுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு
உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார் மேல் முறையீடு செய்திருந்தார்.
அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக
வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி
வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக்
அமர்வு, நான்கு வாரங்களில் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காலையில் அமமுக, மாலையில் பாஜகவில் இணைந்த எம்எல்ஏ வேட்பாளர்!

Halley Karthik

ஆ.ராசா சர்ச்சை பேச்சு – நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு

Web Editor

கில்லி படத்தில் நடித்த துணை நடிகர் மாறன் மரணம்

Halley Karthik