கடன் தொல்லையால் மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!

வேதாரண்யம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் மின்சாரக் கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு. குமரேசன் (35). இவரது…

வேதாரண்யம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் மின்சாரக் கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு. குமரேசன் (35). இவரது மனைவி புவனேஸ்வரி(28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், குழந்தைகள் ஏதும் இல்லை. இந்நிலையில் இத்தம்பதி வீட்டின் மொட்டை மாடியின் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பியை பிடித்த நிலையில், மின்சாரம் தாக்கி இன்று காலை நிகழ்விடத்திலேயே சடலங்களாக கிடந்துள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த காரியாப்பட்டினம் போலீசார் உடலைமீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.