திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை-பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வாதிகாரத்தினாலே புது கோட்டையை கட்டலாம் என்ற தமிழக முதல்வரின் மனக் கோட்டையைத்…

திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வாதிகாரத்தினாலே புது கோட்டையை கட்டலாம் என்ற தமிழக முதல்வரின் மனக் கோட்டையைத் தகர்க்கக் கூடிய மக்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று.

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை. சர்வாதிகாரத்திற்கு எல்லை இல்லை.

முன்னேற்றத்திற்கு வழி இல்லை என்ற தமிழகத்தின் நிலையை உணர்ந்து, ஊழலற்ற உன்னத ஆட்சி தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்கக் கூடிய மக்களின் எழுச்சி கூட்டம்.

புதுக்கோட்டை மாவட்ட & மாநில நிர்வாகிகளோடு, மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற கூட்டம், ஆளும் கட்சியின் மேல் இருக்கும் அதிருப்தியை வெளிச்சப்படுத்தியது என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

முன்னதாக, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தமிழக மக்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.