திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவறை கட்டிடத்தை காணவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் கையில் பதாகைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகளை, நிவர்த்தி செய்வதற்கான 30 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. அவசர தீர்மானமாக 10 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 34வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு திடீரென்று எழுந்து, கடந்த அதிமுக ஆட்சியில் தனது வார்டு பகுதியில் கட்டப்பட்ட கழிவறை கட்டிடத்தை காணவில்லை என்று கையில் பதாகையை ஏந்தியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு, அந்த கழிவறை கட்டிடம் அமைந்திருந்த இடம் ஆய்வு செய்யப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
இதையும் படியுங்கள் : துணிக்கடையின் ஷட்டரை உடைத்து 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை – போலீசார் விசாரணை
இதனைத் தொடர்ந்து, பழனி ரோடு முருகபவனத்தில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ரூ.42 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் கட்ட மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
– கு. பாலமுருகன்