சென்னையில் துணிக்கடையின் ஷட்டரை உடைத்து இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னை அடுத்த பெரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் திவாகர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்குச் சொந்தமான துணிக்கடை ஒன்று, பெரும்பாக்கம் ராதாநகரில் அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை, கடையை திறக்க சுகன்யா வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : நாமக்கல் : காலபைரவர் ஆலயத்தில் வளர்பிறை அஷ்டமி விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, 1.5 லட்சம் மதிப்பிலான துணிகள் மற்றும் ரூ.1,900 ரொக்கம், உண்டியல் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருந்தன. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– கு. பாலமுருகன்