மவுசு கூடும் மாநகராட்சி பள்ளிகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021-22 கல்வியாண்டில் இதுவரை 7 ஆயிரத்து 991 பேர் சேர்ந்துள்ளனர். மேலும் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 14,763 பேர். சென்னையில்…

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021-22 கல்வியாண்டில் இதுவரை 7 ஆயிரத்து 991 பேர் சேர்ந்துள்ளனர். மேலும் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 14,763 பேர்.

சென்னையில் மொத்தம் 281 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2020-21 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்கள் 27,843,இவற்றில் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தவர்கள் 14,763 பேர்.

2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 14 தேதி தொடங்கியது, தொடங்கி கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் 7991 பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் மாணவர்கள் சேர்க்கை சென்றுகொண்டு இருக்கிறது . இன்னும் 2 மாதங்கள் மேல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மொத்தம் 281 மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து 1- ஆம் வகுப்பு முதல் 11 – ஆம் வகுப்பு வரை நேற்று நிலவரப்படி 84493 மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. கடந்த கல்வி ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு புதிய மாணவர்கள் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து வந்த நிலையில், இந்த கல்வியாண்டில் அதிகப்படியான பள்ளி மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.