சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த இரு நாட்களில் 63 ஆயிரத்து 215 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையம் – விம்கோ நகர். பரங்கிமலை – சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் ஜூன் 21ம் தேதி தொடங்கியது. மெட்ரோ ரயிலில், 50 சதவீதம் பேர் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 21, 22ஆம் தேதிகளில் மொத்தம், 63 ஆயிரத்து 215 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடம் இருந்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.







