“காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!

‘புதுப்பேட்டை’, ‘காலா’ ,’அசுரன்’ போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான  நடிகர் நிதிஷ் வீரா இன்று காலை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதிகளவில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்றின் தாக்கம்…

‘புதுப்பேட்டை’, ‘காலா’ ,’அசுரன்’ போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான  நடிகர் நிதிஷ் வீரா இன்று காலை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதிகளவில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்றின் தாக்கம் திரையுலகத்தினரையும் விட்டு வைக்க வில்லை. கொரோனா முதல் அலையில் தொடங்கி இன்று வரை திரைத்துறையின் பலபேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். பாடகர் SPB, நடிகர் பாண்டு, ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே .வி .ஆனந்த், நகைச்சுவை நடிகர் மாறன், என்று கொரோனாவிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.


நிதிஷ் வீரா தமிழ் திரையுலகிற்கு 2000ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ‘வல்லரசு’ திரைப்படத்தில் அறிமுகமானவர். பின்னர் 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் பலராலும் பேசப்பட்ட ‘புதுப்பேட்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர் வெண்ணிலா கபடி குழு , காலா , அசுரன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிதிஷ் வீரா, சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். இவர் மரணத்தால் திரைத்துறையினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், மேலும் நிதிஷ் வீரா மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.