மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று எம்.பி மாணிக்கம் தாக்கூர் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,523 பேர் மரணமடைந்துள்ளனர். டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் இன்னும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே கொரோனா தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்படவில்லை. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மும்பையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது, மாற்றுத்திறனாளிகள் நீண்ட வரிசையில் நிற்கவைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தது. மேலும் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாக்கூர், மாற்றுத்திறனாளன் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அவர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.’மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். எம்பியின் அவசர கோரிக்கைக்கு மத்திய அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை. இது ஒரு வாடிக்கையாகவே உள்ளது’ என்று அவர் பதிவிட்டிருந்தார்.