கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவுக்கு தாய்லாந்து நாடு அனுப்பிய ஆக்சிஜன் உபகரணங்கள் டெல்லி வந்தன.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரே நாளில் கொரோனாவின் உச்சக்கட்டமாக 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துமனைகளில் கொரோனா நோயாளிகள் பலர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர்.
இதையடுத்து இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. இந்தநிலையில் தாய்லாந்து நாட்டில் இருந்தும் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட ஆக்சிஜன் உபகரணங்களைக் கொண்ட சிறப்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது.







