முக்கியச் செய்திகள் கொரோனா

சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி: முன்பதிவு செய்வது எப்படி?

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படுள்ளது. அதற்கான முன்பதிவை எப்படி செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில், வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது உடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படுள்ளது. தற்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் சிறார்கள் அதற்கான முன்பதிவு செய்து கொள்வது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 1-ஆம் தேதி முதல் CoWIN தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எப்படி CoWIN தளத்தில், தங்களின் ஆதார் மற்றும் கைபேசி எண் வைத்து முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்ததோ, அதே போன்ற நடைமுறைதான் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான நடைமுறையாக இருக்க என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துகின்ற மையங்களுக்கு நேரடியாக சென்று, தங்களது அடையாள அட்டையை காண்பித்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படியான நடைமுறை இருக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மழைக்காலத்தில் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது?

EZHILARASAN D

சசிகலா காரில் அதிமுக கொடி: அதிமுக நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார்!

Jeba Arul Robinson

பெகாசஸ் மூலம் யாரை வேவு பார்க்கப்பட்டது என்பதை மத்திய அரசு நாட்டிற்கு சொல்ல வேண்டும்: டி.ஆர்.பாலு

G SaravanaKumar