முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 1,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 945 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,724 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 55 ஆயிரத்து 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26
லட்சத்து 2 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 194 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 198 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Niruban Chakkaaravarthi

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை எச்சரிக்கை

Halley karthi

சங்கர் ஜிவால் உள்பட 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.

Saravana Kumar