110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் அறிவிக்கலாமா? – சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்

விவசாயிகள் மீது போட்டப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவது முதலமைச்சர் அறிவித்ததுகுறித்து எதிர்க்கட்சி ஆளுங்கடிகள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கடந்த ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போட்டப்பட்ட போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவது குறித்து அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பு குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் எ.வ. வேலு, 110 விதியின் கீழ் அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிப்பது வழக்கம். ஆனால் வழக்குகளை ரத்து செய்வது குறித்து அறிவிப்பது இதுவரை வழக்கத்தில் இல்லை. முந்தைய அரசு போராட்டங்களின்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறும்போது தற்போது பிரச்சினை எழுகிறது என்றார்.

இதற்கு சபாநாயகர், வழக்குகள் போடப்படவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எ.வ. வேலு, சட்டம் ஒழுங்கு சீர்குலையும் சூழல் ஏற்படும்போது போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமான நடைமுறைதான். இனிமேல் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யமாட்டீர்களா? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கமாட்டீர்களா? என கேள்வி எழுப்பினார்.

அப்போது சபாநாயகர், 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை. 2021-26 காலகட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதில் உண்மைக்கு மாறான தகவல் எதுவும் இல்லை. போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார். மேலும், முதலமைச்சர் விரும்பும் எந்த அறிவிப்பையும் 110 விதியின் கீழ் வெளியிடலாம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தாண்டி போராட்டம் நடத்தும்போது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஆசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மீது போராட்டங்களின்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் வழக்குகள் இருக்கக்கூடாது. விவசாயிகளின் கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், போராட்டங்களை கிரிமினல் வழக்குகளாக மாற்றும்போது அவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், 2021-26 காலகட்டத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தான் திருச்சி சிறையில் இருந்ததாகவும், பின்னர் திமுக ஆட்சியில் அந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். போராட்டம் என்பது ஜனநாயகத்தின் ஓர் அங்கம் என்பதால், வழக்குகள் ரத்து செய்யப்பட்டதை வரவேற்க வேண்டும் என்றார்.

இதற்கு அவை முன்னவர் செங்கோட்டையன் , 110 விதியின் கீழ் முந்தைய ஆட்சி என்று தான் கூறினார்கள், திமுக ஆட்சி என்றா கூறினார்கள்.

இதன் பிறகு பேசிய உதயநிதி ஸ்டாலின், இது வரலாற்றில் முதல் முறையல்ல. திமுக ஆட்சியிலும் கூடங்குளம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை 110 விதியின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்றார்.

இதையடுத்து சபாநாயகர், 110 விதியின் கீழ் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடலாம். திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இதனை வரவேற்றதாக ஏற்கிறேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.