முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்த விவரங்களை, இணையதளத்தில் இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றதும், ஆக்கிரப்பில் இருந்த கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, இதுவரை மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்த விவரங்களை இந்து அறநிலையத்துறை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, கோயிலுக்கு சொந்தமான நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது கோயில்களுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்ட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் https://hrce.tn.gov.in/hrcehome/landretrieval_search.php என்ற இணையதளத்தில் கோயில் நிலம் மீட்பு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

போதையில் தனக்குத்தானே தீ வைத்து கொண்ட நபர்!

Halley karthi

பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!

Gayathri Venkatesan

அதிமுக- அமமுக இணைய வாய்ப்பு கிடையாது: ஜெயக்குமார்!

Niruban Chakkaaravarthi