தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,219 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,903 என குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய நிலவரப்படி மொத்தம் 15,093 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
இன்று கொரோனா உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இன்று ஒரே நாளில் 2,219 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 415 பேரும், அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 202 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கோவையில் 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திருவள்ளூரில் 84 பேர், சேலத்தில் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
மேலும் மாவட்டம் வாரியாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்து வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் முக்கவசம் அணிய வேண்டும், சமூக பாதுகாப்பினை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.








